கருப்பு பலூன்களின் விலை எகிறிவிடுமோ! தேர்தலுக்கு பிந்தைய கணிப்பால் வைகோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்



people about vaiko after exitpolls

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் தொடங்கி மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பல்வேறு தனியார் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில் அனைத்து ஊடகங்களும் பாரதிய ஜனதா கூட்டணி தான் பெரும்பான்மையான இடங்களை பெற்று ஆட்சியை அமைக்கும் என்றும் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

vaiko

பிரபல ஊடகமான டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 306 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களிலும், இதர கட்சிகள் 104 இடங்களிலும் வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. இதே போன்று தான் பெரும்பாலான ஊடகங்கள் பாஜகவிற்கு சாதகமான கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன.



இதனைத் தொடர்ந்து மோடிக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை கலாய்க்கும் விதமாக பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர். இவர்களின் கையில் சிக்கிய முக்கிய பிரபலம் தமிழகத்தில் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே மோடி அவர்கள் தமிழகம் வரும் சமயங்களில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மோடிக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிச்சயம் நிறைய கருப்பு பலூன்களை வாங்கவேண்டியிருக்கும். இதனால் கருப்பு பலூன்களின் விலையும் உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே வைகோ அவர்களுக்கு பண தட்டுப்பாடு ஏற்படும். ஆகையால் அவருக்கு நிறைய நிதி உதவி தேவைப்படும் என கலாய்த்து மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.