தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அரசே தடை செய்யவில்லை., நடிப்பதில் என்ன?.. ஆன்லைன் ரம்மி கேள்வி சரத்குமார் சரமாரி விளாசல் பதில்.!
ஆன்லைன் ரம்மியை அரசே தடை செய்யவில்லை என்பதால் நடிப்பதில் என்ன வந்துவிடப்போகிறது? நல்லதை நீங்கள் தேர்வு செய்து முடிவெடுங்கள் என்று சரத்குமார் பேட்டியளித்தார்.
திருச்சி நகரில் வைத்து சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு நிர்வாகிகளிடையே உரையாற்றிய பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதை கேளுங்கள். பின்னர் சரத்குமார் நடிப்பது தொடர்பாக கேட்கலாம்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அனைத்து கட்சிகளும் கூறுகிறது. வர்த்தக சூதாட்டம் மக்களுக்கு பாதிப்பை தரும் என முதலில் இருந்து கூறுகிறோம் வர்த்தக விளம்பரங்களை அரசே கட்டுப்படுத்துகிறது. இதனால் அரசுதான் முடிவெடுத்து தடை விதிக்க வேண்டும். அரசு தடை விதித்தால் நான் எப்படி பயன்படுத்துவேன்?. அரசால் தடை செய்யப்பட்டு இருந்தால் நான் எப்படி நடிப்பேன்? விளம்பரப்படுத்துவேன்?.
அரசே தடை செய்யவில்லை என்பதால் நீங்கள் அதனை தடை செய்யுங்கள். சரத் குமார் அனைவரையும் கெடுக்கிறார் என எப்படி சொல்ல முடியும். ஆன்லைன் ரம்மி மட்டுமல்லாது கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகள் இருக்கின்றன. அவையும் சூதாட்டமே. இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிறுத்த வேண்டும். குடி குடியை கெடுக்கும் என தெரியும்.
அதனால் குடிக்காமல் இருக்கிறார்களா?. மதுபானம் கூடாது என நானும் கூறுகிறேன். புகை உடல்நலத்திற்கு கேடு என்றால், ஏன் அதன் தயாரிப்பை நிறுத்தவில்லை. உலகத்தில் உள்ளதை பார்த்து கெட்டுப்போக கூடாது. மனபக்குவதோடு இருக்க வேண்டும். நல்லவற்றை எடுத்துக்கொண்டு தீயவற்றை ஒதுக்க வேண்டும். நாம் சுய கட்டுப்பாடோடு இருந்தால் அவர்களின் கடையை மூடிவிடப்போகிறார்கள்" என்று பேசினார்.