மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சோனியா காந்திக்கு 2 வது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி: பதைபதைப்பில் காங்கிரஸ் வட்டாரம்..!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அக்கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்திக்கு, கடந்த 10ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தனது வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு தற்போது 2 வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு நெறிமுறைகளின்படி அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவரான ஜெயராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்திக்கு, ஒரு மாத கால இடைவெளியில் மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.