JUST IN || மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை: ஆந்திராவில் நிலைமை கட்டுக்குள் வந்தது..!!



Stopped bus service from Chennai to Tirupati and Chittoor has resumed

ஆந்திர மாநிலம், நந்தியாலா பகுதியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக ஆந்திர மாநிலத்தில் புதிய ஐ.டி நிறுவனங்கள் அமைக்க அனுமதி அளிக்க சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சந்திரபாபு நாயுடு நந்தியாலா டி.ஐ.ஜி தலைமையிலான காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். இதனால் அவரது கட்சி தொண்டர்கள் சில இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

இதன் விளைவாக, காஞ்சிபுரம், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. திருப்பதியில் இருந்து சென்னை வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை முடங்கிய பேருந்து சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து திருப்பதி மற்றும் சித்தூருக்கு நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. சென்னையிலிருந்து திருத்தணி வழியாக திருப்பதி, சித்தூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.