குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தெற்கில் இருந்து இந்தியாவுக்காக ஒரு குரல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் ஒரு ஆடியோ தொடரின் மூலம் இந்தியாவுக்காக பேச உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே உரையாற்றி வந்தார். இந்த நிலையில் ஆடியோ தொடர் (Podcast) மூலம் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த தொடருக்கு 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' (Speaking for india) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து வீடியோ ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியிருப்பதாவது:-
ஆரம்பிக்கலாங்கலா? வணக்கம் என்று தொடங்கும் அந்த வீடியோவில் இந்தியாவுக்காக பேசவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம், பா.ஜனதா ஆட்சியில் இந்தியா எப்படி உருக்குலைந்துள்ளது?.
Awakening India's Tomorrow, A Southern Voice Speaks for #INDIA!#Speaking4India pic.twitter.com/VqdY0PoxWF
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023
எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ, சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்பது குறித்து பேச இருக்கிறேன். அதற்கு 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' என்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமா?. தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.