மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்ஜெட் பரிதாபங்கள்: வங்கக்கடலில் பாஜகவை தூக்கி வீசுங்கள் - சந்திரசேகர ராவ் காட்டம்..!
பாரதிய ஜனதா கட்சியை வங்கக்கடலில் வீசியெறிய வேண்டும் என சந்திரசேகர ராவ் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்திய பாராளுமன்றத்தில் 2022 - 2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பூஜ்ய மதிப்பெண் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், பட்ஜெட் குறித்து தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவிக்கையில், "பாஜகவை அதிகாரத்தில் இருந்து விரட்டி, அதனை வங்கக்கடலில் தூக்கி வீசியெறிய வேண்டும். பாஜக என்ன செய்துகொண்டு இருந்தாலும், அதனை அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
நமது நாட்டிற்கு எது நல்லதோ, எது தேவையோ அதனை செய்ய வேண்டும். இந்தியா ஜனநாயக நாடு. பிரதமர் குறுகிய பார்வை கொண்டவராக இருந்து வருகிறார். இந்தியாவின் தலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது. மும்பைக்கு சென்று சிவசேனா கட்சியின் தலைவர் மற்றும் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச இருக்கிறேன்.
இந்திய தேசத்தை நம்புகிறேன். நமது தேசத்திற்கு மாற்றத்திற்கான தேவை வந்துள்ளது. புரட்சி தேவைப்படுகிறது. சண்டையிட்டால் தான் மாற்றம் வரும். சிங்கப்பூரில் எதுவும் இல்லை என்றாலும், மூளை உள்ளது. நமது அரசிடம் மூளை இல்லை. அரசியலமைப்பு சட்டம் வலுப்படுத்த வேண்டும். பாஜக மக்களை மோசமாக ஏமாற்றி வருகிறது" என்று தெரிவித்தார்.