3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
மோடியால் மீண்டும் பிரதமராக முடியாதா.?! நாளை முக்கிய வழக்கு விசாரணை.!
ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி பேசிய போது, "காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்போது மக்கள் வைத்திருக்கும் சொத்துக்கள் மற்றும் தங்கம் அனைத்தையும் பறித்து நாட்டிற்குள் ஊடுருவிய நபர்களுக்கு கொடுக்கப்படும். அவர்களது தேர்தல் அறிக்கையில் மக்கள் அனைவரின் சொத்துக்களும் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டதே அதற்கு சாட்சி. "முஸ்லிம் மக்களுக்கே நாட்டின் சொத்துக்களில் முதல் உரிமை" என காங்கிரஸின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்து இருந்தார். எனவே மக்களின் சொத்துக்களை கணக்கிட்டு அதை பறித்து காங்கிரஸ்காரர்கள் யாருக்கு கொடுப்பார்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம்.
இந்திய மக்கள் சிரமப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் அந்த ஊடுருவிகளுக்கு போவதை விரும்புகிறீர்களா.? உங்களிடம் 2 வீடுகள் இருந்தால் கூட அவர்கள் ஒன்றை பறித்துக் கொள்வார்கள். இதை நீங்கள் விரும்புகிறீர்களா? நம் நாட்டில் உள்ள பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கணக்கிட்டு அவர்களிடம் இருந்து அவற்றை பறித்துக் கொள்ளும். தங்கம் என்பது ஒரு பெண்ணின் சுயமரியாதை. தங்கத்தின் விலையில் ஒரு பெண்ணின் தாலிக்கான மரியாதை இல்லை. அது அவர்களது கனவு. ஒரு பெண்ணின் தாலியை பறிக்கக் கூடிய உரிமை எந்த அரசுக்கும் இல்லை." என்று பேசி இருந்தார். இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரதமர் மோடியின் பெயரில் வழக்கு தொடரப்பட்டது. அதில்," கடவுளின் பெயர்களை தவறாக பயன்படுத்தி பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராக மோடியை அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இதை மீதான வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு வந்தால் அது மோடியின் அரசியல் வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்பதால் நாட்டில் இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தக்கூடும்.