காணாமல் போன 16 வயது சிறுவன்! கைக்குழந்தையுடன் நின்ற இளம்நர்ஸ்! டிக்டாக் தொடர்பால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
சமீப காலமாக டிக் டாக் செயலி இளைஞர்களால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தங்களது திறமைகளை காட்ட வேண்டும் என்ற பெயரில் எல்லைமீறும் ஆபாசத்தால் கலாச்சார சீரழிவும் ஏற்படுகிறது. மேலும் இதனால் பலரது வாழ்க்கையும் கேள்விக்குறியான நிலையும் ஏற்பட்டு வருகிறது.
தேனியை சேர்ந்தவர் தீபக்.16 வயது நிறைந்த இவர் சென்னையில் தங்கி ஐடிஐ படித்து வந்துள்ளார். இவர் டிக்டாக் செயலியை பெருமளவில் பயன்படுத்தி வந்துள்ளார், மேலும் ஏராளமான வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் டிக் டாக் மூலம் அவருக்கு தஞ்சாவூரை சேர்ந்த நர்ஸ் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் டிக்டாக் டபுள் விண்டோவில் ஏராளமான வீடியோக்களை செய்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் சிறுவன் தீபத்தை காணவில்லை என போலீசாரிடம் அவரது தந்தை புகார் அளித்திருந்தார். மேலும் சரியான நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் அவர் உயர் நீதிமன்றத்தில் பலமுறை ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
பின்னர் களத்தில் இறங்கிய போலீசார் சிறுவனின் செல்போன் சிக்னலை பயன்படுத்தி அவர் ஊத்துக்குளியில் இருப்பதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது அந்த சிறுவன் நர்ஸுடன் உறவில் இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த நர்சிடம் பிறந்த சில நாட்களே ஆன குழந்தை ஒன்றும் இருந்தது. இதனை தொடர்ந்து அந்தப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டபோது வீட்டில் பார்த்த எனக்கு வீட்டில் மாப்பிள்ளைப் பார்த்ததாகவும், அவரை பிடிக்காததால் சென்னை தப்பி வந்து அந்த சிறுவனை திருமணம் செய்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் குழந்தை எங்கள் குழந்தை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவனை திருமணம் செய்துகொண்டதால் அந்த நர்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுவனும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கைக்குழந்தையின் நலம் கருதி அதனை தாயுடன் காப்பகத்தில் இருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.