திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியா.!
ஆசிய டேபிள் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை மணிகா வெண்கல பதக்கம் வென்றார்.
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டித்தொடர், பாங்காங் நகரில் நடைபெற்று வந்தது. இந்திய அணியின் சார்பில் வீராங்கனை மணிகா பத்ரா கலந்துகொண்டு தனது வீரதீர ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்தார்.
நேற்று அவரும், ஜப்பானிய வீராங்கனை ஹீனா ஹயாட்டாவும் மோதினர். ஜப்பானிய வீராங்கனை ஹீனா 3 முறை ஆசிய கோப்பை சாம்பியன் ஆவார். அவரை எதிர்த்து களமிறங்கிய மணிகா 4-2 செட் கணக்கில் வெற்றி அடைந்து வெண்கல பதக்கத்தை தட்டிச்சென்றார்.
ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டித்தொடரில் இந்தியா சார்பில் விளையாடிய வீராங்கனை வெற்றியடைந்து பதக்கத்தை தட்டிச்சென்றது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.