மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
20 ஓவர்கள் போராடி கடைசியில் கோட்டைவிட்ட மயங்.. பஞ்சாப் அணி பரிதாப தோல்வி!
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேப்பிடஸ் அணி சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தனர். ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே மளமளவென சரிந்தனர். ஆனால் துவக்க ஆட்டக்காரர் மயங் அகர்வால் மட்டும் நிதானமாக விளையாடி ஆட்டத்தை கடைசிவரை எடுத்து சென்றார்.
அரைசதம் அடித்த மயங் அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைபட்ட நிலையில் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ஜோர்டனும் விக்கெட்டினை பறிகொடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.
பின்னர் நடந்த சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிதான இலக்கை துரத்தி பிடித்து டெல்லி கேப்பிடஸ் அணி வெற்றி பெற்றது.