96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தோனிக்கு முடிந்தது; கங்குலிக்கு துவங்கியது! தலைசிறந்த கேப்டன்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் கபில்தேவிற்க்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த தலை சிறந்த கேப்டன்கள் சவுரவ் கங்குலி மற்றும் மகேந்திர சிங் டோனி.
2007ஆம் ஆண்டு முதல் இரண்டாயிரத்தி 2016 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. அவர் இந்திய அணிக்காக பல கோப்பைகளை கைப்பற்றி கொடுத்தார். அதே சமயம் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பல சாதனைகளை முறியடித்தார். ஜூலை 7 ஆம் தேதியான இன்று தோனியின் பிறந்தநாள்.
இந்திய கிரிக்கெட்டின் தாதா என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பிறந்தநாள் ஜூலை 8. இந்திய கிரிக்கெட் அணியை சர்வதேச அளவில் மிகப் பெரிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற தலை சிறந்த கேப்டன்களின் பிறந்தநாட்கள் அடுத்தடுத்த நாட்களில் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்பு.
ஆஃப் சைடின் அரசன் என அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் சவுரவ் கங்குலி 2000ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் அரங்கில் மிகப் பெரும் சாதனையை படைத்தது. மேலும் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்றது.
நேற்று இரவு தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற துவங்கிய ரசிகர்கள் இன்று சவுரவ் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறத் துவங்கிவிட்டனர்.