திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நிறைவேறாமலே போய்விடுமா தோனியின் ஆசை? அதுமட்டும் நடந்தால் நிச்சயம் உறுதி..
சென்னையில் தனது கடைசி ஐபில் போட்டியை விளையாடவேண்டும் என்ற தோனியின் கனவு நிறைவேறுமா என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
ஐபில் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.58 போட்டிகள் இதுவரை முடிந்துள்ளநிலையில், 16 புள்ளிகளுடன் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல் மற்றும் இரண்டாவது இடத்திலும், 12 புள்ளியுடன் சென்னை அணி நான்கவது இடத்திலும் உள்ளது.
தோனியின் ஆசை நிறைவேறுமா:
இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி குஜராத் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர் கொள்கிறது. இந்நிலையில் தோனிக்கு சென்னையில் தனது கடைசி ஆட்டத்தை விளையாடவேண்டும் என்ற ஆசை நிறைவேறுமா என்ற கேள்வி எழுத்துள்ளது. தனது கடைசி போட்டி சென்னையில்தான் இருக்கும் என அவரே பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: குழந்தை பிறக்கப் போகுது.. சீக்கிரம் கேமை முடிங்க.! சாக்ஷி தோனி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!!
நடப்பு சீசனில் தோனி காயத்துடன் போராடி வருவதால் அவருக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்கும் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டநிலையில், கோப்பை வென்று அவரை வழியனுப்ப வேண்டும் என்றுதான் சென்னை அணி வீரர்களும், ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தோனியின் கடைசி போட்டி:
ஆனால் மற்ற அணிகளும் பலமாக இருப்பதால் இந்த முறை சென்னை அணியால் கோப்பையை வெல்லமுடியுமா என்ற கேள்வியும் உள்ளது. Eliminator மற்றும் இறுதி போட்டிகள் சென்னையில் தான் நடைபெறுகின்றன. சென்னை அணி இறுதி போட்டி அல்லது Eliminator போட்டி வரை சென்றாலே கடைசி போட்டி சென்னையில் என்ற தோனியின் ஆசை நிறைவேறும்.
இது இரண்டுமே நடக்கவில்லை என்றால், தோனியின் கடைசி போட்டி ஒன்று அகமதாபாத்தில் அல்லது பெங்களூருவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடற்கரையில் நீச்சல் உடையில் தோனி பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்.!