கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல விளையாட்டு வீரர்.! அவரது அனுபவம் எப்படி இருந்தது.?



football player talk about corona exprience

கொரோனா பிடியிலிருந்து மீள்வதற்கு வீட்டிலேயே இருங்கள் என்பது பொய் அல்ல நிஜம். மிகவும் கவனமாக இருங்கள் என இத்தாலியின் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் பவுலோ டைபாலா தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இத்தாலியில் மட்டும் பலியானோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

corona

இந்நிலையில், இத்தாலியின் செரி ஏ கால்பந்து லீக் அணியான யுவென்டஸ்க்காக விளையாடி வருபவர் அர்ஜென்டினாவின் இளம் வீரர் பவுலோ டைபாலா. சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அந்த வீரரை தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கொரோனாவில் இருந்து தப்பியுள்ள இவர், அதில் இருந்து கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வீட்டிற்குள்ளேயே இருங்கள் இந்த வார்த்தைதான் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது எல்லா நாடுகளும் கடைபிடிக்க வேண்டிய ஒரே ஆயுதமாக உள்ளது. எனக்கு மோசமான இருமல் இருந்தது, தூங்கும்போது மிகவும் சோர்வாக இருந்தேன். குளிராக இருப்பது போன்று உணர்ந்தேன். 

ஆரம்பத்தில் இது என்னவாக இருக்கும் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால், முதலில் எனது அணியில் உள்ள சக வீரர்கள் இருவருக்கு உறுதி செய்யப்பட்ட பிறகு, எனக்கு தொற்றிக் கொண்டது உறுதியானது. கிளப் எங்களுக்கு வைட்டமின்கள் கொடுத்தது. அதன்பின் நாங்கள் குணமடைந்து வந்ததை உணர்ந்தோம். முதலில் பயமாக இருந்தது. தற்போது சரியாகி விட்டது. தற்போது எங்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என தெரிவித்தார்.