96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றபோது கங்குலி அணிந்துவந்த உடை! அதன் ரகசியத்தை வெளியிட்ட கங்குலி!
மும்பையில் நேற்று புதன்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கங்குலி 65 ஆண்டுகளில் முழுநேர பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற முதல் கிரிக்கெட் வீரர் ஆனார்.
பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி அணிந்து வந்த கருநீல நிற மேலாடை தொடர்பில் ரகசியம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முழு நேர தலைவராக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கருநீல நிற மேலாடை அணிந்திருந்தார். இதை கவனித்த செய்தியாளர்கள், இந்த உடை தளர்வாக இருக்கிறதே, அப்படி என்ன இந்த உடையில் விசேஷம் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த கங்குலி ‘நான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற போது இந்த ‘பிளேஸர்’ உடை எனக்கு கிடைத்தது. அதையே இன்று கிரிக்கெட் வாரிய தலைவராக பதவி ஏற்கும் நாளில் அணிந்து கொள்வது என்று முடிவு செய்தேன். ஆனால் இந்த அளவுக்கு தளர்வாக இருக்கும் என்று உணரவில்லை என கூறினார்.