"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
இந்தியாவிற்கு 20 ஓவர்கள் ஒதுக்கப்பட்டால் கதை அம்பேல்! இலக்கு எவ்வளவு தெரியுமா?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐசிசி உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் மழை குறுக்கிடும் என ஏற்கனவே கணிக்கப்பட்டது.
எதிர்பார்த்ததைப் போன்றே முதல் இன்னிங்சில் 46.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு மழை அதிகமாக பெய்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.
தற்போது எதிர்பார்த்ததைவிட மழை அதிகமாக பெய்து கொண்டிருப்பதால் ஆட்டம் துவங்க கால தாமதம் ஏற்படும் என தெரிகிறது. ஒருவேளை ஆட்டம் இன்று இதற்கு மேல் ஒரு பந்து கூட விசப்படாமல் கைவிடப்பட்டால் ரிஷர்வ் நாளான நாளை மீண்டும் நடைபெறும்.
வழக்கமாக ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட நேர்த்தை விட 2 மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படும். ஆனால் இன்றைய போட்டிக்கு நடுவர்கள் கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியுள்ளார்கள். அதாவது மொத்தம் 3 மணி நேரம் கூடுதல். இதற்கு காரணம் ரிஷர்வ் நாளிற்கு ஆட்டத்தை எடுத்து செல்லாமல் இன்றே முடிவை பெற வேண்டும் என்பது தான்.
அவ்வாறு அந்த கூடுதல் நேரத்தில் ஆட்டம் நடைபெற்று இந்திய அணிக்கு 20 ஓவர்கள் ஒதுக்கப்பட்டால் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த மைதானத்தில் இது மிகவும் கடினமான இலக்கு தான். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் இந்தியாவின் சாம்பியன் கனவு என்னவாகும் என்ற அச்சம் அனைவருக்கும் நிச்சயம் இருக்கும்.
In case New Zealand doesn't bat again, India's target in
46 overs will be 237
40 overs will be 223
35 overs will be 209
30 overs will be 192
25 overs will be 172
20 overs will be 148#IndvNZ