மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசிய கோப்பை 2023: பரபரப்பான கட்டத்தில் மீண்டும் மோதும் இந்தியா-பாகிஸ்தான்..!!
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன.
லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டி தொடரின் இன்றைய போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் மோதுகின்றன. முன்னதாக நடந்த லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், யாருக்கு வெற்றி தோல்வியின்றி இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
போட்டி நடைபெறும் கொழும்பு நகரில் இன்று மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரையில் இவ்விரு அணிகளும் இதுவரை 133 முறை நேருக்கு நேர் மோதியதில், 55 போட்டிகளில் இந்தியாவும், 73 போட்டிகளில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகளில் முடிவு இல்லை.
இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா:- சுப்மன் கில், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.
பாகிஸ்தான்:- பஹர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆஹா சல்மான், இப்திகர் அகமது, ஷதப் கான், பஹீம் அஷரப், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுப்.