#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாழ்வா சாவா ஆஸ்.அணியை வீழ்த்துமா அல்ல விழுமா இந்தியா.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதனால் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-2 என சமநிலையில் உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் 32 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
இந்திய அணிக்கு துவக்கத்தில் தொடர்ந்து சொதப்பிய ஷிகர் தவான் மீண்டும் பார்முக்கு வந்துள்ளது ஆறுதலான விஷயம். ரோகித் சர்மா நம்பிக்கை அளிக்கிறார். ஆனால் இன்னும் இந்திய அணியின் ‘மிடில் ஆர்டரில்’ பெரும் வெற்றிடம் உள்ளது.
ஜடேஜாவுக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற சகால் ரன்களை வாரி வழங்கினார். குல்தீப் மட்டும் சற்று ஆறுதல் தருகிறார். பீல்டிங் படுமோசமாக உள்ளது. இதில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் காண்பது அவசியம்.
ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், ஷான் மார்ஷ் இன்று சுதாரிக்க வேண்டியது கட்டாயம். கவாஜா, ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல் வழக்கமான பார்மை தொடரலாம். டர்னர் மிரட்டலான பேட்டிங்கை தொடர வாய்ப்புள்ளது. கம்மின்ஸ், ஜாம்பா பவுலிங்கில் பெரும் தொல்லையாக உள்ளனர்.
இரு அணிகளும் சமபலத்தோடு சம நிலையில் உள்ளதால் டில்லியில் நடக்கும் இன்றைய இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு நிலவுகிறது.