வெஸ்ட் இண்டீசை வெளுத்து வாங்கியது இந்தியா! மாபெரும் சாதனைப்படைத்து நான்காவது போட்டியில் வெற்றி!



India won the fourth ODI against to westindies

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம்போல் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆரம்பமே சொதப்பியதுபோல் தவான் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடந்த மூன்று போட்டிகளில் சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் 16 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் நின்று நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 60 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் அதிரடியாக ஆடி 162 ரன்னில் ஆட்டமிழந்தார்.

cricket

மொத்தமாக அவர் 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்தார். 7வது முறையாக ரோகித் சர்மா 150 ரங்களுக்கு மேல் கடந்து சாதனை படைத்துள்ளார்.  மேலும் இந்திய அணிக்காக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார் ரோகித் சர்மா.


இதை தொடர்ந்து காலத்தில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. ஒருகட்டத்தில் அணைத்து வீரர்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பட்டு தோல்வியை தழுவியது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.