மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய அணி வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.! 2 போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.!
நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் மீண்டும் கொரோனா 2வது அலை வேகமெடுக்க துவங்கியது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், சமீபத்தில் பல திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் ,இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் நடுகள வீரரான , 23 வயதான அனிருத் தபாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அனிருத் தபா ஹோட்டலின் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் நாளை வங்கதேசத்தையும், வருகிற 15-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்களில் அனிருத் தபா விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.