மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய அணியில் சிறந்த தமிழக வீரர்.! கடைசி நேரத்தில் ராசி இல்லையே.!! கொரோனா படுத்தும் பாடு.!!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியில் 17 வயதில் இடம்பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் வாசிங்டன் சுந்தர். சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாசிங்டன் 4 டெஸ்ட்டில் விளையாடி 3 அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 31 டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார். இவர் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்தினார்.
இதனையடுத்து வாசிங்டன் சுந்தர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணில் தேர்வானார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி நாளை தென்னாப்பிரிக்கா புறப்படும் நிலையில், வாசிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
எனவே வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் பிற வீரர்களுடன் தனி விமானத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனியாக மாற்று தேதியில் தென் ஆப்பிரிக்கா அனுப்பி வைக்கப்படுவாரா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.