#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சின்னத் தல ரெய்னாவுக்கு போங்கு காட்டிய சின்ன பையன் ரிஷப் பண்ட்; வைரலாகும் வீடியோ.!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், டெல்லி அணி முதல் இடத்திலும் இருந்தன. இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணி மோதும் 2வது ஆட்டம் நேற்று சென்னையின் சொந்த மண்ணில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. தனது அணிக்காக தல தோனி அதிரடியாக ஆடி 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் கடைசிவரை அட்டமிழக்காமல் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.
இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது. அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் நீண்ட நேரம் களத்தில் நின்று 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்.
இதனால் ஆட்டத்தின் 17 வது ஓவரிலேயே, 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, டெல்லி அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் இந்த வெற்றியினால் புள்ளிபட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.
Just @RishabPant777 things 😅😅 pic.twitter.com/efUrfbzxBI
— IndianPremierLeague (@IPL) May 1, 2019
இந்நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்த போது ரெய்னா பேட்டிங் செய்ய எதிர் முனைக்கு செல்ல முயன்றார். அப்போது அவரை வழிமறித்துக்கொண்ட டெல்லி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், வழி விடாமல் ரெய்னாவை ஜாலியாக வம்புக்கு இழுத்தார். பல முறை ரெய்னா விலகிச் சென்ற போதும் வழி விடாத ரிஷப் பண்ட் செய்த சேட்டை வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.