தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சூப்பர் ஓவரில் ஹைதராபாத் தோல்வியடைய முக்கிய காரணம் என்ன தெரியுமா?
நேற்றைய போட்டியில் மும்பை அணியின் வெற்றியை தீர்மானித்த சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி முழுவதும் ஆறு பந்துகளை சந்திக்காததே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இருந்தன.
இந்நிலையில் அடுத்த சுற்றுக்கு யார் செல்வது என்பது தொடர்பாக மற்ற அணிகளுக்கு இடையே கடுமையான போட்டிகள் நிலவும் நிலையில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையேயான போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. டீகாக் அதிரடியாக விளையாடி 69 ரன் எடுத்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய கைதராபாத் அணி நிதானமாக விளையாடி வெற்றியின் அருகில் சென்றது. கைதராபாத் அணி சார்பாக மனிஷ் பாண்டே 71 ரன் எடுத்தார்.
கடைசி 6 பந்தில் 17 ரன் தேவை என்ற நிலையில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார் மனிஷ் பாண்டே. அதன்பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டை இழந்து 8 ரன் எடுத்தது. 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மும்பை அணி மூன்று பந்துகளில் 9 ரன் எடுத்து சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் ஹைதராபாத் அணி தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தது என்னவெனில் ஹைதராபாத் சந்தித்த சூப்பர் ஓவரில் முழுவதுமாக ஆறு பந்துகளை சந்திக்காததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. சூப்பர் ஓவரை மும்பை அணியின் வீரர்
பும்ரா வீசினார். முதல் பந்தை சந்தித்த மணிஷ் பாண்டே ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் இரண்டாவது ரன்னுக்கு முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பிறகு களமிறங்கிய மார்டின் கப்டில் ஒரு ரன் எடுக்க மூன்றாவது பந்தை சந்தித்த நபி சிக்சர் விளாசினார். அதன் பிறகு நான்காவது பந்தில் போல்டாகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதோடு அந்த ஓவர் நிறைவு பெற்றது ஏனெனில் சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐதராபாத் அணி மீதமுள்ள இரண்டு பந்துகளையும் சந்திக்காமல் ஒன்பது ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
கூடுதலாக அந்த இரண்டு பந்துகளையும் ஹைதராபாத் அணி சந்தித்திருந்தால் மும்பை அணிக்கு இலக்காக கூடுதல் ரன்களை நிர்ணயித்திருக்கும். இதனால் போட்டியின் முடிவு ஹைதராபாத் அணிக்கு சாதகமாக அமைய வாய்ப்புகூட உருவாகி இருக்கும்.