ஐபிஎல் 12வது சீசனில் முதன்முதலாக அந்த சாதனையை நிகழ்த்திய ஹர்திக் பாண்டியா; என்ன சாதனை தெரியுமா?



ipl-2019-longest-sixer-hardik-pandiya---mumbai-indians

ஐபில் போட்டியின் 12 வது சீஸனின் ஏழாவது போட்டி நேற்று மும்பை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.  டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து மும்பை அணியின் துவக்க வீரர்களான டீகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். டீகாக் 20 பந்துகளில் 23 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 

IPL 2019

யுவராஜ் 12 பந்துகளில் 23  ரன்கள் எடுத்து ரசிகர்களை உற்சாக படுத்தினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 34 ரன்களை குவித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 6  ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. இந்நிலையில் மும்பை அணி பேட்டிங் செய்த போது, பெங்களூரு வீரர் சிராஜ் வீசிய போட்டியின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை, ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு அனுப்பினார். 

அது பெங்களூரு சின்னசாமி மைதானத்தை விட்டு வெளியே சென்றது. இந்த சிக்சர் 104 மீட்டருக்கு சென்றது. எனவே இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் இதுதான் அதிக தூரம் சென்ற சிக்ஸர் ஆக மாறியது.

இந்த 12 வது சீசனில் அதிக தூரம் சிக்சர் அடித்த வீரர்கள் விவரம்:

ஹர்டிக்  பாண்டியா( மும்பை இந்தியன்ஸ்)

104.00 மீ

டேவிட்  மில்லர்(கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

98.00 மீ  
 
கிறிஸ் கெயில்(கிங்ஸ் லெவன் பஞ்சாப்)       

98.00 மீ    

ஆண்ட்ரே  ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

97.00 மீ

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் அதிக தூரம் சிக்சர் அடித்த 4 வீரர்கள் விவரம்:

அல்பி மோர்கெல்(125 மீ)

பிரவீன்  குமார்(124 மீ)

ஆடம் கில்கிறிஸ்ட்(122 மீ)

ராபின்  உத்தப்பா(120 மீ)