பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தொடர்ந்து நான்கு தோல்வி! பரிதாபநிலையில் டெல்லி! மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி
டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதிய இன்றைய போட்டியில் டெல்லி அணி படுதோல்வியடைந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் 13 வது சீசன் T20 போட்டியின் 51 வது ஆட்டத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் இன்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
111 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். 26 ரன்களில் எடுத்திருந்தநிலையில் டிகாக் ஆட்டமிழந்தார். இவரை அடுத்து ஜோடி சேர்ந்த சூர்யா குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் அதிரடியில் மும்பை அணி 14 . 2 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றின்மூலம் 18 புள்ளிகளுடன் மும்பை அணி தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள டெல்லி அணி இன்றைய தோல்வியை அடுத்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.