தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
யாருயா இந்த மனுஷன்..? கடைசியாக இறங்கி ஆட்டத்தை மொத்தமாக மாற்றிய ஒத்த ஆள்.! ஆனாலும் அம்புட்டும் வீண் ஆகிடுச்சே.!
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று மட்டும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. அதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை தோற்கடித்தது.
இதனையடுத்து இரண்டாவது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. சன்ரைசர்ஸ் அணியில் அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் அவுட் ஆன நிலையில் வில்லியம்சன் மட்டும் நிலைத்து நின்று ஆடி 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். சன்ரைசர்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான சூழ்நிலை உருவானது.
அப்போது 8வது விக்கெட்டாக களமிறங்கிய சுஜித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. சுஜித் 6 பந்துகளில் 14 ரன்களை எடுத்திருந்தார். அதில் 2 பவுண்டரியும் ஒரு சிக்சரும் அடங்கும். இதனையடுத்து சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 7 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதனையடுத்து டெல்லி அணி சூப்பர் ஓவரில் 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.