என்ன நடக்கிறது? பிராவோவையே சீண்டிய ஹைதராபாத் அணி வீரர்! எழுந்தது சர்ச்சை! அதன்பின் நடந்த சம்பவம்.



Khaleel Ahmed Posted A Clarification Tweet and Deleted It

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த கடைசி போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் கலீல் அஹமத் நடந்துகொண்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய கடைசி போட்டியில், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் அடித்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய சாம் கரண் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினார்.

csk vs srh

அவரை அடுத்து விளையாடிய சென்னை அணி வீரர்களும் ஓரளவு சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் ஹைத்ராபாத் அணி வீரர் கலீல் அஹமத் வீசிய பந்தில் சென்னை அணி வீரர் பிராவோ முதல் பந்திலையே ஆட்டம் இழந்து வெளியேறினார். பிராவோ முதல் பந்திலையே ஆட்டம் இழந்து வெளியேறியநிலையில் அவரை பார்த்து கலீல் அஹமத் நக்கலாக சிரித்தார்.

பொதுவாக விக்கெட் விழுந்ததும் பந்து வீசுவார் பேட்ஸ்மேனை பார்த்து குறைப்பது, சிரிப்பது வழக்கம் என்றாலும், ப்ராவோவை பார்த்து கலீல் அஹமது சிரித்த விதம் அந்த அணி வீரர்கள் உடன்பட பலரையும் கோபமடையச்செய்தது. ஏதோ கிரிக்கெட் விளையாட தெரியாத ஒருவரை பார்த்து சிரிப்பதுபோல் அவர் ப்ராவோவை பார்த்து சிரித்தார்.

csk vs srh

இந்நிலையில் இந்த சம்பவம் கடும் சர்ச்சையானநிலையில், இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்தார் கலீல் அகமத். அதில், "பிராவோ எனக்கு அண்ணன் போன்றவர், அவர் ஒரு லெஜெண்ட். நான் அவரை பார்த்து கேலியாக சிரிக்கவில்லை. நான் சிரித்ததற்கு வேறு காரணம் உள்ளது" என விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால் அந்த ட்விட்டை போட்ட பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை சிறிது நேரத்தில் அந்த ட்விட்டை அவர் நீக்கிவிட்டார். இவர் ஏன் ப்ராவோவை பார்த்து அப்படி சிரித்தார்? ஏன் விளக்கம் கொடுத்தார்? பின்னர் ஏன் அந்த பதிவை நீக்கியுள்ளார் என்று தற்போது கேள்வி எழுந்துவருகிறது.