தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சர்ச்சையான பட்லரின் அவுட்; 2012 ல் சச்சின், ஷேவாக்கின் பெருந்தன்மை; வைரலாகும் வீடியோ.!
ஐபில் போட்டியின் 12 வது சீசனில் நேற்று முன்தினம் நடந்த நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டியில் வித்தியாசமான முறையில் பட்லரை அவுட் செய்து வெளியே அனுப்பினார் அஸ்வின்.
அதாவது, அஸ்வின் பந்து எரிவதற்கு முன்பே நான் ஸ்ட்ரைக்கில் நின்றிருந்த பட்லர் கிரீஸை விட்டு வெளியே நின்றிருந்தார். இந்த மன்கட் முறை கிரிக்கெட் விதிமுறைக்கு உட்பட்டது என்றாலும், இந்த முறையில் பேட்ஸ்மேனை அவுட்டாக்குவது முழுதும் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என கருதப்படுகிறது.
இந்த முறையில் ஒருவீரரை அவுட்டாக்கினாலும் அந்த அணியின் கேப்டன் விக்கெட் கைப்பற்ற விரும்பவில்லை என கருதினால், பேட்ஸ்மேன் நாட் அவுட் என அறிவிக்கப்படுவார்கள். ஆனால் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் என்பதால், அந்த முறைக்கும் பட்லருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.
Following the uproar over Ravi Ashwin's IPL 'Mankad', here's a look back at an incident from a 2012 ODI against Sri Lanka at the Gabba pic.twitter.com/IRR528s0ha
— cricket.com.au (@cricketcomau) March 27, 2019
இதேபோல் 2012 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது அதே அஸ்வின் இலங்கை வீரர் திரிமானேவை இந்த முறையில் அவுட் கேட்டு நடுவரிடம் முறையிடுகிறார். அப்போது அப்போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட சேவாக்கிடம் நடுவர் விவாதிக்க சேவாக், சச்சின் உடன் கலந்து பேசி விக்கெட் வேண்டாம் என்று முடிவெடுத்து அவரை தொடர்ந்து விளையாட அனுமதித்துள்ளனர்.