மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோனியின் உலக சாதனையை குறைந்த போட்டிகளிலேயே முறியடித்த இங்கிலாந்து கேப்டன்!
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்சர்கள் விளாசியவர் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதலிடத்தில் இருந்தார். தற்போது அந்த சாதனையை இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முறியடித்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் இயான் மோர்கன் இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தநிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 328 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் 84 பந்துகளில் 106 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 15 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும்.
இதுவரை தோனி கேப்டனாக 332 போட்டிகளில் 211 சிக்சர்கள் அடித்திருந்தார். இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் அந்த சாதனையை 163 போட்டிகளில் 212 சிக்கசர்கள் அடித்து முறியடித்துள்ளார். தோனியை விட பாதி அளவு குறைந்த போட்டிகளில் இயான் மோர்கன் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.