மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயிற்சியின் போதே மாஸ் காட்டும் தல தோனி.! நீண்ட நாட்களுக்கு பிறகு அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸர்..!
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடவுள்ள மகேந்திர சிங் தோனி பயிற்சி ஆட்டத்தின் போது ஹெலிகாப்டர் சிக்ஸ் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை வந்து, இறுதி பந்தில் கோப்பையை மிஸ் செய்தது சிஎஸ்கே அணி. இதனால் இந்தவருடம் சென்னை அணி கோப்பையை வெல்லும் என சிஎஸ்கே ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எந்த ஒரு தொடரிலும் விளையாடவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி சென்னை அணிக்காக விளையாடவுள்ளார்.
The HELICOPTER SHOT 🚁that worth more than million dollars 😉😍 #Dhoni #Yellove #Csk
— Saravanan Hari 💛🦁🏏 (@CricSuperFan) March 3, 2020
.
Waiting for March 29th just to see him as a LEADER! 😊😎 @msdhoni pic.twitter.com/ga2aF1mDnI
இதனைத்தொடர்ந்து, அதற்கான பயிற்சியில் இறங்கியுள்ளார் தல தோனி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பயிற்சின் போது, ஹெலிகாப்டர் சிக்ஸர் அடித்து மிரட்டினார். சென்னை அணி வீரர்கள் பயிற்சி செய்வதை பார்ப்பதற்கு வந்த ரசிகர்கள் தல தோனி சிக்ஸர் அடித்த போது, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.