பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு! 2019 உலகக்கோப்பை தொடரின் தனிச்சிறப்பு
1975 ஆம் ஆண்டு துவங்கி 2019 இந்த ஆண்டு வரை இதுவரை 12 சர்வதேச உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது. கடந்த 11 தொடர்களிலும் கோப்பையை வெல்லாத ஒரு புதிய அணி இந்த 12வது உலக கோப்பை தொடரில் வெல்லப் போகிறது.
இதுவரை நடைபெற்றுள்ள 11 உலக கோப்பை தொடர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 5 முறையும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணி இரண்டு முறையும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லாத நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு இது நான்காவது உலகக் கோப்பை இறுதிப் போட்டி. 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை இறுதிப்போட்டியில் எதிர்கொண்ட நியூசிலாந்து அணிக்கு இது இரண்டாவது உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஆகும். எப்படியோ கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய உலக கோப்பை சாம்பியன் இந்த வருடம் உருவாக உள்ளனர். இரு அணிகளுக்கும் வாழ்த்துக்கள்!