இந்திய அணிக்கு ஆதரவு தந்த பாகிஸ்தான்!. மைதானத்தில் பரபரப்பு!.



pakistan fan support to indian team


ஆசிய கோப்பைக்கான 14ஆவது ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும் வங்கதேச அணியும் மோதியது. இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. 

இப்போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 48.3 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை தடுமாறி வந்தது.

கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜாதவ் மற்றும்  குல்தீப் களத்தில் இருந்தனர். ஒன்றும் இரண்டுமாக இருவரும் எடுத்து சமாளித்தனர். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் இந்த ஆட்டமும் டிராவில் முடிந்து விடுமோ என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். 

asian cup

ஆனால் அதிர்ஷ்டவசமாக மக்மதுல்லா வீசிய கடைசி பந்து ஜாதவ் காலில் பட்டு செல்ல ஒரு ஓட்டம் எடுத்து இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகரான பசீர் சாசா என்பவர் இந்திய அணியின் ஜெர்சி அணிந்து கொண்டு மைதானத்தில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தார். அது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.