அப்படி என்ன தான் செய்துவிட்டார் ஜடேஜா..? இணையத்தை கலக்கும் பிரதமர் மோடியின் பாராட்டு கடிதம்..!



Pm modi writes letter to jadeja

கடந்த ஜூன் 8 ஆம் தேதி தனது மகளின் 5 ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா செய்துள்ள சமூக பணியை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மகளின் 5 ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு ஒரே நாளில் 101 பெண்‌ குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி சேமிப்பு வங்கி கணக்கை துவங்கிய ஜடேஜா தம்பதியினர், அனைத்து வங்கி கணக்கிலும் தலா 11 ஆயிரம் ரூபாயை வைப்பு நிதியாக டெபாசிட் செய்தனர். இந்த தகவலினை ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஏற்கனவே பதிவிட்டிருந்தார்.

Pm modi writes letter to jadeja

ஜடேஜாவின் இந்த உன்னதமான செயலினை பலரும் பாராட்டி வந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஜடேஜாவை பாராட்டி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த கடிதத்தில் ஜடேஜாவின் இந்த சமூக அக்கறைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பெண் குழந்தைகளின் நலனுக்காக அரசு‌ மேற்கொண்டு வரும் இதைப்போன்ற நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். தங்களின் இதைப்போன்ற தொடர் உன்னதமான சேவைகள் மற்றவர்களுக்கும் நல்ல உதாரணமாக அமைந்து அவர்களையும் தூண்ட செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.