மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பஞ்சாப் அணிக்கு தொடரும் பரிதாபம்.. வெறும் 2 இன்ஞ்சில் பறிபோன வெற்றி!
ஐபிஎல் 2020 டி20 தொடரில் இன்று மாலை நடைபெற்ற 24 ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 29 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயங் அகர்வால் சிறப்பான துவக்கத்தினை அளித்தனர். நிதானமாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.
ஒரு சமயம் பஞ்சாப் அணி நிச்சயம் வென்றுவிடும் என்ற நிலை உருவானது. 56 ரன்கள் எடுத்த மயங் அகர்வால் 15 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை தங்கள் வசமாக்கினர்.
பூரன் 16, சிம்ரன் சிங் 4, ராகுல் 74, மந்தீப் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 19 ஆவது ஓவரை வீசிய பிரதீஷ் அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
மேக்ஸ்வெல் களத்தில் இருந்தார். சுனில் நரைனின் சுழலில் தடுமாறிய மேக்ஸ்வெல் முதல் 4 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். 5 ஆவது பந்தில் மந்தீப் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மேக்ஸ்வெல் தூக்கி அடித்த பந்து எல்லை கோட்டின் மிக அருகில் குத்தியதால் நான்கு ரன்கள் மட்டுமே கிடைத்தது. பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.