#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உலகக்கோப்பையில் இருந்து முழுவதுமாக விலகும் தவான்! அவருக்கு பதிலாக களமிறங்கும் அதிரடி வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்ட காரணத்தால் உலகக்கோப்பையில் இருந்து முழுவதுமாக விலகுவதாகவும், அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 25 லீக்கில் நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. கடைசி ஓவரில் தோல்வியை நியூஸிலாந்திடம் தோர்த்தது தென் ஆப்பிரிக்கா.
இந்திய அணி இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியா அணியை வென்றது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் தவானுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த மூன்று வாரத்திற்கு ஆருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தவான் அடுத்த மூன்று வாரத்திற்கு எந்த போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு 3 வாரங்கள் ஓய்வு தேவை என்ற நிலையில், தவானுக்கு பதிலாக யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் விக்கெட் கீப்பர்களான ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ரிஷாப் பண்ட் இருவரில் ஒருவர் களமிறங்கலாம் என செய்திகள் வெளியானது.
அதன் பின்னர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக தவானுக்கு பதிலாக களமிறங்கி அரைசதம் விளாசினார். இந்நிலையில், காயம் குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகும் என்பதால், ஷிகர் தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் களமிறங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.