மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சூப்பர் ஓவரில் நான் இறங்கியதற்கு இதுதான் காரணம்" ரோகித் சர்மா ஓபன் டாக்
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
இரு அணிகளும் 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுக்க ஆட்டம் டையில் முடிந்தது. பின்னர் அறிவிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்கள் எடுத்தது.
பின்னர் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் 4 பந்துகளில் இந்திய அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி வெற்றி பெற செய்தார்.
ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா, "சூப்பர் ஓவரில் நான் ஏற்கெனவே களமிறங்கியிருந்தாலும் முதல்முறையாக பந்துகளை சந்தித்தது இந்த போட்டியில் தான். 18 ரன்கள் தேவை என்பதால் முதல் பந்திலிருந்தே சுழற்றி அடிக்க வேண்டுமென்று தான் நாங்கள் முடிவெடுத்தோம்.
மேலும் சூப்பர் ஓவரில் நான் களமிறங்க முக்கிய காரணம் முதல் இன்னிங்ஸில் நான் அடித்த 65 ரன்கள். அன்றைய போட்டியில் எந்த பேட்ஸ்மேன் சிறப்பாக ஆடினாரோ அவரை சூப்பர் ஓவரில் களமிறக்குவது தான் சிறந்தது. அதன் அடிப்படையில் தான் நான் இறங்கினேன்.
இல்லையென்றால் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கியிருப்பார். கே.எல்.ராகுல் ஏற்கனவே நல்ல பார்மில் இருப்பதால் முதல் தேர்வு அவர் தான்." என்றார்.