நான் அப்பவே சொன்னேன்.. இந்தியாவின் தோல்விக்கு இது தான் காரணம்..! சச்சின் ஓப்பன் டாக்.!



sachin-talk-about-wtc21

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 5-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 64 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. அப்போது கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா களத்தில் இருந்தனர். இதனையடுத்து கடைசி நாளான ஆட்டத்தில் இவர்கள் இருவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

ஆனால் விராட் கோலி 13 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஆதிர்ச்சியை கொடுத்தனர். இதனையடுத்து170 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இந்தநிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான காரணத்தை சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில், "நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள. நீங்கள்தான் தலைசிறந்த அணி. ஆனால் இந்திய அணி மோசமான ஆட்டத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளது. ரிசர்வ் டேவின் முதல் 10 ஓவர்கள் மிக முக்கியம் என ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் 10 பந்துகள் இடைவெளியில் கோலி, புஜாரா இருவரும் அவுட்டாகினர். இதுதான் அணி மீதான அழுத்தத்தை அதிகரித்தது." எனக்கூறியுள்ளார்.