சச்சின் சாதனையை அசால்ட்டாக முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி! காத்திருக்கும் ரசிகர்கள்!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இன்று முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு முன்னர் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த நிலையில் இன்று உள்ளூரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மோதுகிறது.
இந்திய அணி நியூசிலாந்தில் நடைபெற்ற இரண்டு தொடரில் தோல்வி அடைந்தது. அந்த போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலி கடுமையாகச் சொதப்பினார்.
விராட்கோலி கடந்த 22 இன்னிங்ஸ்களாக அவ சதங்கள் எடுக்கவில்லை. இதுவரை, விராட் 70 சதங்கள் விளாசிய நிலையில், விரைவில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என அணைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்றைய போட்டியில் சதம் அடித்தால் 71 சதம் என்ற முறையில், சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடிப்பார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை சச்சின், சங்கக்கரா, ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா மற்றும் ஜெயவர்தனே ஆகிய ஐந்து வீரர்கள் மட்டுமே 12 ஆயிரம் ரன்ங்களுக்கு மேல் அடித்து உள்ள நிலையில், விராட்கோலி இந்த போட்டியில் 133 ரன்கள் அளிக்கும் பட்சத்தில் 12000 ரன்கள் என்ற சாதனையை படைத்து, சச்சினுக்கு அடுத்தபடியாக இதனை செய்யும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.
சச்சின் 12 ஆயிரம் ரன்களை 300 ஒருநாள் போட்டிகளில் கடந்தார். கோலி, 239 போட்டிகளில் விளையாடி மிகக் குறைந்த போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்துவது குறிப்பிடத்தக்கது.