பெங்களூரு அணியில் இணையும் முன்னனி வேகப்பந்து வீச்சாளர்! இனியாவது வெல்லுமா கோலியின் படை



steyn-returning-back-to-rcb

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு வெற்றியை கூட சந்திக்காத ஒரே அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் கோலி தலைமையிலானஅந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது.

பெங்களூரு அணியின் இந்த தொடர் தோல்விக்கு முதன்மை காரணம், அந்த அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருப்பது தான். வேகப்பந்து வீச்சில் அந்த அணியின் நவ்தீப் சைனி மட்டும் ஓரளவிற்கு நல்ல முறையில் பந்து வீசி வருகிறார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் மிரட்டலாக இல்லை.

IPL 2019

இதற்கு காரணம் அந்த அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் நாதன் குல்டர்நைல் அணிக்கு திரும்பாதது தான். முதலில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆடிய அவர் தற்பொழுது காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள இயலாது என அறிவித்துவிட்டார்.

IPL 2019

இந்நிலையில் பந்துவீச்சில் பலவீனமாக இருந்து வரும் பெங்களூரு அணிக்கு தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியில் 2016 ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக ஆடிய இவரை கடந்த இரண்டு வருடங்களாக எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

IPL 2019

மேலும் ஸ்டெயின் 2008 முதல் 2010 வரை பெங்களூர் அணிக்காக 28 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்நிலையில் மீண்டும் பெங்களூரு அணியில் இவர் இணைவதால் அந்த அணிக்கு கூடுதல் பலம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நடைபெறும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டெயின் களமிறங்குவாரா என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை.