மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருக்கு அறுவை சிகிச்சை.! அவரே பகிர்ந்த புகைப்படம்.!
கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் இலையில் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஸ்ரேயாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்ரேயாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
Surgery was a success and with lion-hearted determination, I’ll be back in no time 🦁 Thank you for your wishes 😊 pic.twitter.com/F9oJQcSLqH
— Shreyas Iyer (@ShreyasIyer15) April 8, 2021
அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் நாள் ஆட்டம் இன்று துவங்குகிறது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை அணியும் மோதும் போட்டி நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சை முடிந்தாலும் ஸ்ரேயாஸ் அய்யரால் போட்டியில் கலந்துகொள்ள முடியாது என கூறப்படுகிறது.