பாகிஸ்தான் ரசிகையுடன் செல்பி எடுத்துக்கொண்ட சூர்யகுமார் யாதவ்.. வீடியோ வைரல்.!



Suryakumar Yadav Selfie With Pakistan Fan Girl 

 

துபாயில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025 போட்டி, நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாக்., கிரிக்கெட் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. 

இதனால் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் கோஹ்லி சதம் அடித்து விளாசினார். எஞ்சிய வீரர்கள் சேர்ந்து அணி .42.3 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி அடைந்தது.

இதையும் படிங்க: பந்துவீச்சில் அசத்திய ரேணுகா.. டெல்லி - பெங்களூர் பெண்கள் கிரிக்கெட்டில் அசத்தல் ஆட்டம்.!

விராட் கோலி அணியின் வெற்றிக்கு இறுதியான பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெறச் செய்து, பின் தானும் சதம் என்ற இலக்கை அடைந்தார். 

 

இந்நிலையில், போட்டியின்போது இந்திய கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ், மைதானத்தில் இருந்தபடி கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம் அவரை பார்த்த பாகிஸ்தான் ரசிகை செல்பி எடுக்க கோரிக்கை வைத்தார். 

அதனை ஏற்றுக்கொண்ட சூரியகுமார் செல்பி எடுத்துக்கொடுக்க, ரசிகை மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: #Breaking: 37 பந்துகளில் 100 ரன்கள்.. வெளுத்தது வாங்கிய அபிஷேக் சர்மா.. அதிரும் அரங்கம்.!