உலகக்கோப்பையில் சொந்த நாட்டுக்கு எதிராக கோல் அடித்துவிட்டு அமைதியாக இருந்த வீரர்.! குழம்பிய ரசிகர்கள்.!



switzerland football player silent to after put a goal

கத்தாரில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் நேற்று ஸ்விட்சர்லாந்து அணி, கேமரூனை 1-0 என வீழ்த்தியது. அல் ஜனோப் மைதானத்தில் நடைபெற்ற  இந்தப் போட்டியில் 48வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து  வீரர் பிரீல் எம்போலோ கோல் அடித்தார்.

பொதுவாக கால்பந்து போட்டியில் கோல் அடித்தால், கோல் அடிக்கும் அந்த வீரர் துள்ளி குதிப்பது வழக்கம்.  ஆனால் ஸ்விட்சர்லாந்து  வீரர் பிரீல் எம்போலோ கோல் அடித்துவிட்டு, எந்த கொண்டாட்டமும் இல்லாமல் அமைதியாக நின்றார். ஸ்விட்சர்லாந்து  வீரர் பிரீல் எம்போலோ அமைதியாக நின்றதற்கு காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பியிருந்தனர்.

இந்தநிலையில், இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது அவர் பிறந்தது கேமரூன் நாட்டில் தான். தனது சொந்த நாட்டிற்கு எதிராக கோல் அடித்ததால் அவர் சற்று சங்கடப்பட்டார். எம்போலோ தனக்கு 5 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் பிரிந்ததால், தனது தாயுடன் பிரான்சுக்கு குடிபெயர்ந்து பிறகு சுவிட்சர்லாந்தில் குடிபுகுந்தார் எம்பலோ.