கையில் சுருட்டு, கொலைவெறி பார்வை.. மிரள வைக்கும் நடிகை அனுஷ்கா.! வெளிவந்த போஸ்டர்!!
கால்பந்து உலகின் முடி சூடா மன்னன் பீலேவின் உடல் நாளை தகனம்..!
பிரேசிலின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கால்பந்து விளையாட்டின் தீவிரத்தையும், சுவாரஸ்யத்தையும் உலக ரசிகர்களிடையே கொண்டு சென்றவர்களில் பீலேவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் பீலேவின் வருகைக்குப் பிறகுதான் கால்பந்து விளையாட்டின் முக்கியத்துவம் அனைவராலும் அறியப்பட்டது. மேலும் பிலே உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் 3 உலகக் கோப்பைகளை வென்றதோடு அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் பீலேவுக்கு குடல் பகுதியில் புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனையடுத்து பீலேவுக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் பீலே உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்து வந்த நிலையில் பீலே காலமானார்.
இதனையடுத்து பீலேவின் இறுதி சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னதாக சாண்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் ரசிகர்கள் கூடி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து நாளை நடக்க இருக்கும் இறுதி சடங்கில் பிரேசிலின் புதிய அதிபர் லுலா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீலேவின் மறைவு கால்பந்து ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.