ஒரே ஒரு வீரரை வாங்க போட்டி போடும் 3 அணிகள்.? என்ன காரணம் தெரியுமா.?



three team expect shreyas iyer in auction

2021 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக முதல் பாதியில் விளையாடாமல் இருந்த காரணத்தால் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு பதில் ரிஷப் பண்ட் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரிஷப் பண்ட் மிக சிறந்த முறையில் அணியை வழிநடத்தி பல வெற்றிகளை பெற்றுகொடுத்தார். இதன் காரணமாக ரிஷப் பண்ட் இனி கேப்டனாக தொடரட்டும் என்று டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

கேப்டனாக செயல்படவில்லை என்றாலும் டெல்லி அணி ஸ்ரேயாஸ் அய்யர் தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்த நிலையில வருகிற 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி), பிரித்வி ஷா (7.50 கோடி), ஆன்ரிக் நோர்க்கியா (6.50 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்துள்ளது. டெல்லி அணி ஐயரை தக்கவைத்துகொள்ளாத நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரை பல முக்கிய அணிகள் தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கு போட்டி போட்டுக் கொண்டு உள்ளது.

shreyas iyer

பெங்களூரு அணியில் இருந்து ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்டார். அதேபோல் விராட் கோலியும் கேப்டன்சிக்கு குட்பை சொல்லிவிட்டார். இந்த இரண்டையும் ஸ்ரேயாஸ் நிரப்பலாம் என்பதால் அந்த அணி அவரை எடுக்க ஆர்வம் காட்டும். அதேபோல், சென்னை அணியும் ஸ்ரேயாஸை வாங்க கடும் முயற்சி எடுக்கலாம். ஏனெனில் ரெய்னாவுக்கு மாற்றாகவோ அல்லது தோனி வருங்காலத்தில் ஓய்வு பெறும் பட்சத்தில் கேப்டன் பொறுப்பும் அவருக்கு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ஏலத்தில் பங்கேற்க விரும்புகிறேன் என தெரிவித்துவிட்டதால், அந்த அணி அவரை தக்கவைக்கவில்லை. இதையடுத்து ஸ்ரேயாஸை அந்த அணி வாங்க முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.