மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளைய போட்டியில் இந்த ஒரு விஷயம் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் - விராட் கோலி
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறுகிறு. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு ஆட்டம் துவங்கும். நாளை மைதானத்தில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. ஏற்கனவே லீக் போட்டி மழையால் ரத்தானதால் பயிற்சி ஆட்டத்திற்கு பிறகு இந்தியா நியூசிலாந்தை நாளை தான் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் நாளைய போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "இரு அணிகளும் சர்வதேச அளவில் சமம் வாய்ந்த அணிகள். கடந்த உலகக்கோப்பையில் இதேபோன்று நாக் அவுட் போட்டியில் வென்று தான் நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் பல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து அணியை மீட்டு வெற்றியை தேடி தந்துள்ளனர். நியூசிலாந்து அணியிலும் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசக் கூடிய திறமையான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே இரு அணியும் கிட்டத்தட்ட சம பலத்தில் தான் உள்ளது.
நாளைய போட்டியைப் பொறுத்தவரை எந்த அணி இக்கட்டான சூழ்நிலைகளில் துணிவுடன் தனது திறமையை நிரூபிக்க அதோ அந்த அளித்து தான் வெற்றி கிடைக்கும் நாங்கள் வழக்கம் போல இக்கட்டான சூழ்நிலைகளை கையாண்டு போட்டியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம்" என கூறியுள்ளார்.