மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நேற்றய ஆட்டத்தில் தாறுமாறு..! ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி.!!
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணிக் கேப்டன் டெம்பா பவுமா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். கேப்டன் ராகுல் 12 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி, சிறப்பாக ஆடி 63 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் விராட் கோலி கடைசியாக விளையாடிய 6 இன்னிங்சில் 5 அரைசதம் விளாசி சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது இந்த இன்னிங்ஸ் மூலம் அந்நிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்:
1. விராட் கோலி - 5108 ரன்கள் (108 போட்டிகள்)
2. சச்சின் டெண்டுல்கர் - 5065 ரன்கள் (147 போட்டிகள்)
3. எம்எஸ் தோனி : 4520 ரன்கள் (145 போட்டிகள்)
இதே போல அந்நிய மண்ணில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முறியடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக ரன்கள் குவித்த சர்வதேச வீரர்கள்:1. குமார் சங்கக்காரா : 5518 ரன்கள் (149 போட்டிகள்)
2. விராட் கோலி : 5108 ரன்கள் (108 போட்டிகள்)
3. ரிக்கி பாண்டிங் : 5090 ரன்கள் (132 போட்டிகள்)