மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டி20 போட்டியிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல்.! என்ன காரணம்.?
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.
கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகினார். இதன்பிறகு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தரின் பெயர் இடம்பெற்றிருந்தது.
அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பகுதியில் விளையாடாத நடராஜனும் தமிழக அணியில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாகக் குணமாகாததால் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் கூறுகையில், வாஷிங்டன் சுந்தர் பற்றி ராகுல் டிராவிடம் கேட்டபோது, கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடும் அளவுக்கு இன்னும் முழு உடற்தகுதியை வாஷிங்டன் சுந்தர் அடையவில்லை என கூறினார். மேலும், உடனடியாக விளையாடும்படி அவசரம் காட்டவேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். அவருடைய கருத்தின் அடிப்படையில் முடிவு எடுத்துள்ளோம் என்று கூறினார்.