#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சீனியர் வீரருக்கு ஆப்பு.. இளம் வீரருக்கு வாய்ப்பு.. அப்படி ஒரு முடிவை எடுப்பாரா தோனி!
ஐபிஎல் 2020 டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. சென்னை அணியில் எந்த நட்சத்திர வீரர்களும் இதுவரை தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தவில்லை.
துவக்க ஆட்டக்காரருக்கான குளறுபடியில் கடந்த போட்டியில் ஒருவழியாக டூப்ளஸிஸ் களமிறக்கப்பட்டார். ஆனால் வாட்சன் இன்னும் பார்மிற்கு வராதது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மிடில் ஆர்டரிலும் சென்னை அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. சீனியர் வீரரான கேதர் ஜாதவ் அணியில் என்ன செய்கிறார் என்றே யாருக்கும் புரியவில்லை.
இதனால் இன்றைய போட்டியில் கேதர் ஜாதவை நீக்கிவிட்டு தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான ஜெகதீசனுக்கு தோனி வாய்ப்பளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய முடிவினை தோனி எடுத்தால் நல்லது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.