மீண்டும் இந்தியா- பாக்கிஸ்தான் மோதல்! உச்சக்கட்ட பரபரப்பில் உலகக்கோப்பை தொடர்



Will india meet Pakistam again in wc19

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி அல்லது இறுதி போட்டியில் மோத வாய்ப்புள்ளதாக புள்ளிப்பட்டியல் தெரிவிக்கிறது.

கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி பாக்கிஸ்தானை 89(D/L) ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதோடு தொடர்ந்து 7 முறை பாக்கிஸ்தான் அணி உலகக்கோப்பையில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.

wc2019

இந்நிலையில் மீண்டும் எப்போது இந்தியா பாக்கிஸ்தான் அணிகள் மோதும் என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த ஆசை இந்த உலகக்கோப்பையிலேயே நிறைவேற அருமையான வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை இந்திய அணி மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். அந்த சமயத்தில் நான்காவது இடத்தை பிடிக்கும் அணியுடன் இந்தியா அரையிறுதியில் மோத வேண்டிவரும்.

wc2019

தற்பொழுது அரையிறுதிக்குள் நுழையும் அந்த நான்காவது அணிக்கான போராட்டம் தான் உலகக் கோப்பை தொடரில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்திற்காக இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மிகப்பெரிய பல பரிட்சையை நடத்துகின்றன.

இந்த மூன்று அணிகளுக்கும் இன்னும் தலா இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் அரையிறுதிக்குள் முன்னேறிவிடும். அதே சமயம் ஒரு போட்டியில் தோல்வியடைந்து பாகிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பாக்கிஸ்தான் நான்காவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும்.

wc2019

ஒருவேளை இந்தியா இரண்டாம் இடத்தையும் பாக்கிஸ்தான் நான்காம் இடத்தையும் பிடித்து இரு அணிகளும் அரையிறுதியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு கிடைக்கும்.