ஒரே ஆட்டத்தில் இத்தனை சாதனைகளா! இன்று மொத்தமாக சாதிப்பாரா ரோகித் சர்மா



Will rohit sharma break all records today

இன்று நடைபெறும் உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு பல சாதனைகளைப் படைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அந்த சாதனைகளில் இரண்டு சாதனைகள் இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிப்பது ஆகும். இந்த உலக கோப்பையில் 8 போட்டிகளில் ஆடியுள்ள ரோகித் ஷர்மா 647 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இன்றைற போட்டியில் இன்னும் 27 ரன்கள் எடுத்தால் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் (673) எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் ரோகித். சச்சின் இந்த சாதனையை தென் ஆப்பிரிக்காவில் 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் சாதித்தார்.

wc2019

இரண்டாவது உலக கோப்பை தொடரில் விளையாடும் ரோகித் சர்மா இதுவரை 6 சதங்களை அடித்துள்ளார். இது 6 உலக கோப்பை தொடர்களில் ஆடியுள்ள சச்சினின் சாதனைக்கு சமம். ஒரு சதம் அடித்தால் 7 சதங்களுடன் உலகக் கோப்பை தொடர்களில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். மேலும் சங்ககராவின் தொடர்ந்து 4 சதமடித்த சாதனையையும் சமன் செய்வார். 

wc2019

இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா இன்னும் 53 ரன்கள் எடுத்தால் ஒரு உலகக் கோப்பை தொடரில் 700 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். ஒருவேளை ரோகித் சர்மா இன்று இந்த சாதனையை படைக்க தவறினால் 638 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் வார்னர் அடுத்த போட்டியில் இந்த சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது.

wc2019

மேலும் இன்னும் 23 ரன்கள் எடுத்தால் உலகக் கோப்பை தொடர்களில் 1000 ரன்களை கடந்துவிடுவார் ரோஹித் சர்மா. இந்திய அணியில் இதுவரை சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.