மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
T20 Woman's Asia Cup: தாய்லாந்தை தவிடுபொடியாக்கி பைனலில் நுழைந்த இந்தியா..! 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. சாதித்த சிங்கங்கள்..!!
டி20 ஆசிய மகளிர்கோப்பை கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. 24 போட்டிகள் கொண்ட இத்தொடரில், இந்தியா இன்று தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இருந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து பெண்கள் அணிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்திய பெண்கள் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 74 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி நேரடியாக 15 ம் தேதி நடக்கவுள்ள பைனலுக்கு நுழைந்துள்ளது. பிற்பகல் ஆட்டத்தில் பாகிஸ்தான் பெண்கள் அணியும் - ஸ்ரீலங்கா பெண்கள் அணியும் பலபரிட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் வெற்றி அடைபவர்கள் இந்தியாவுடன் பைனல் போட்டியை எதிர்கொள்ள வேண்டும்.
இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏனெனில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதனைப்போல, இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டாலும் அதே நிலை தான். ஆகையால் நாளை மறுநாள் நடக்கவுள்ள போட்டி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாடிய ஷப்லி 28 பந்துகளில் 42 ரன்களும், ஹர்மபிரீத் 30 பந்துகளில் 36 ரன்களும், ஜெமியா 26 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இந்திய மகளிர் அணியின் சார்பில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், எஸ் மேகனா, சினே ராணா, டி ஹேமலதா, மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ் , கிரண் நவ்கிரே ஆகியோர் விளையாடுகின்றனர்.